» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம்

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 8:35:08 PM (IST)



நாசரேத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

நாசரேத்தில் ஆழ்வை கிழக்கு ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விழாவை யொட்டி 8 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 27ம் தேதி முதல் ஞான ராஜ் நகர், வாழையடி பத்ரகாளி அம்மன் கோவில், நாசரேத் சக்தி விநாயகர் கோயில், திருவள்ளுவர் காலணி, கட்டையனுர், நல்லான்விளை, நெய்விளை, மூக்குப்பீறி போன்ற இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் காலை மாலை பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். 

இந்நிலையில் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்ட சிலைகளை வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தை பாஜக தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் கனல் ஆறுமுகம். கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் நாசரேத் சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு குரும்பூர், ஆறுமுகநேரி, வழியாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை வளாகத்தில் விஜயர்சனம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட செய்தி உறுப்பினர் தாடி முருகன், நகர தலைவர் ராஜ செல்வம். நகர பொதுச் செயலாளர் சங்கர், நகர துணை தலைவர் அஜித், ராம், செல்வா, தெய்வசிகாமணி, ராமதாஸ், பரமசிவம், கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

ரோகித் செல்வம்Sep 2, 2025 - 07:02:59 AM | Posted IP 104.2*****

Indraya vilayattu Seithigal in Tamil

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory