» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞர் பிறந்த நாள்விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா : அமைச்சர் அனிதா சு.ராதாகிருஷ்ணன் தகவல்!

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 8:26:29 PM (IST)

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா வருகிற 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தெற்கு மாவட்டச் செயலாளர், அமைச்சர் அனிதா சு.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நலத்திட்டம் வழங்குதல் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் போன்ற வகையில் எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டுமென தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

அதன் நிறைவாக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 200 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா 03.09.2025 அன்று மாலை 4.30 மணிக்கு தண்டுபத்தில் உள்ள பசுங்கிளி அம்மாள் - ராமமூர்த்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற 10 அணிகளுக்கு கோப்பை மற்றும் முதல் பரிசாக ரூ.1,00,000 இரண்டாம் பரிசாக ரூ.80,000 மூன்றாம் பரிசாக ரூ.70,000 நான்காம் பரிசாக ரூ.50,000 ஐந்தாம் பரிசு ரூ.40,000 ஆறாம் பரிசு ரூ.30,000 ஏழாம் பரிசு ரூ.25,000 எட்டாம் பரிசு ரூ.20,000, ஒன்பதாம் பரிசு ரூ.15,000 பத்தாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படவுள்ளது.

மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. அதேபோல் போட்டியில் பங்கேற்ற அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. எனது (அனிதா சு.ராதாகிருஷ்ணன்) தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்று பரிசு, கோப்பை மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக் அணிகளுக்கு உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் திருச்செந்தூர் தொகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னணியினர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு விரும்பிகள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory