» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:32:45 PM (IST)

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் வைத்து வழிபட்டு செய்யப்பட்ட விநாயகர்கள் எம்ஜிஆர் நகர், கணபதி நகர், பூப் பாண்டிபுரம், VMS நகர், சின்னக்கண்ணுபுரம், மகிழ்ச்சி புரம், இந்திரா நகர் பகுதிகளில் கோவில்கள், வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் விஜசர்சன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை சோட்டையன் தோப்பு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் முன்பாக தொழிலதிபர் ஜெயம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ச்சியாக வட்ட கோயில், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா, 2ம் கேட், ரத வீதி, சத்திரம், 1ம்கேட், மட்டக்கடை திரேஸ்புரம் வழியாக சங்கு முக விநாயகர் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடார ஒன்றிய தலைவர் சிபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா, ஒன்றிய நிர்வாகிகள் மாதவன், சுரேஷ், ராஜா, சங்கர் முத்து, துரை புருசோத்தமன், சரவணன், வெங்கடேஸ்வரன், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தபசு மண்டபத்தில்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி நகரில் இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி உள்பட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தபசு மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் ஊர்வலத்தை அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










