» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி: நண்பர் படுகாயம்
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:21:55 PM (IST)
தூத்துக்குடி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.
நெல்லை அருகே கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் அரசதுரை (40). எலக்ட்ரீசியன். பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைக்கு சென்றனர். பின்னர் வேலையை முடித்து விட்டு அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றனர்.
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அய்யனார் காலனி அருகில் சென்றபோது, முன்னால் சென்ற கியாஸ் சிலிண்டர் லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அரசதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆகாஷ் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த அரசதுரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடியை சேர்ந்த ராஜவேல் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











SivaSriAug 31, 2025 - 09:29:23 PM | Posted IP 104.2*****