» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்னொளி கபடி போட்டி: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 10:08:04 AM (IST)

தூத்துக்குடியில் மாநில அளவிலான கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மின்னொளி கபடி போட்டியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் ஆதரவுடன் சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரன் நகர் சந்தன மாரியம்மன் கோவில் இளைஞர் அணி நண்பர் குழு இணைந்து முருகேசன் நாடார் நினைவு கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஆண் பெண் மின்னொளி கபடி போட்டி நடைபெறுகிறது.
சந்தன மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிக்கு விஜயராகவன் தலைமை வகித்தார். கபடி கந்தன், கருணாகரன், முத்து கணேஷ்குமார், சங்கரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகராஜ் வரவேற்றார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கபடி போட்டியை தொடங்கி வைத்தார். முதல்போட்டியில் லயோலா அணியை வீழ்த்தி சேரன் அணி வெற்றி வெற்றது.
இன்று நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அர்ஜூனா விருது பெற்ற மணத்தி கணேசன், அமெச்சூர் கபடி கழக இணைச்செயலாளர் கபடி கந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










