» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் செப்.7-ல் பிற்பகல் தரிசனம் ரத்து!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 10:04:55 AM (IST)
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சந்திர கிரகணம் செப். 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது. இதையொட்டி, இக்கோயிலில் அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு சாயரட்சை, பிற்பகல் 3 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து பள்ளியறை பூஜைகள் நடைபெற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
இதனால், பிற்பகல் 2 மணிவரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். செப். 8ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










