» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

5,300 ஆண்டுக்கு முன்பே இரும்பை கண்டுபிடித்த தமிழர்கள் : ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:59:13 AM (IST)



5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டார்கள் என கீழடி ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தகத் திருவிழா (தொடர்ந்து படி தூத்துக்குடி) -வின் 8ஆவது நாளான நேற்று நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற கவிதை- வாசித்தலும் புனைதலும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கதைகளின் பெரும்பரப்பு என்ற தலைப்பில் எழுத்தாளர் மீரான் மைதீன், கீழ்பட்டணம்- வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இரவு 7 மணிக்கு தொல்லியல் ஆய்வுகளும், சங்க கால தமிழரின் தொன்மையும் என்ற தலைப்பில், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கீழடி ஆய்வாளரும், இயக்குநருமான கி.அமர்நாத் ராமகிருஷ்ணா கலந்துகொண்டு பேசியதாவது: உலகில், அறிவியல் இந்த அளவிற்கு வளருவதற்கு இரும்பு கண்டுபிடிப்புதான் முக்கிய காரணம் எனவும், அதை கண்டுபிடித்தவர்கள் மத்திய ஆசிய பகுதியில் வாழ்ந்தவர்கள் எனவும் நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.

ஆனால் உண்மையில்லை என நிரூபித்தது தூத்துக்குடி மாவட்டம் சிவகளைதான். அதற்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, கி.மு. 2142- லேயே இரும்பு பயன்படுத்தப்பட்ட செய்தியைச் சொன்னது. பின்னர் சிவகளையிலும் , ஆதிச்சநல்லூரிலும் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமாக 5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்தியை இன்று உலகத்துக்கு அவை சொல்லியுள்ளன என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், உதவி ஆட்சியர் புவனேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

பெ.ராஜேஷ் செல்வரதி - வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர்Aug 31, 2025 - 04:21:23 PM | Posted IP 162.1*****

நம் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டிய காலம் இனிதே இனிக்கிறது. உரக்கச் சொல்வோம் நாமே உலகின் மூத்த குடி என்று....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory