» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ளாளன்விளை பள்ளியில் இருபெரும் விழா: அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!
புதன் 27, ஆகஸ்ட் 2025 4:58:07 PM (IST)

வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இருபெரும் விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையின் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் முருகேசன், மத்திய கலால்துறை அதிகாரி ஆண்ட்ரூ பீட்டர், சென்னை தொழிலதிபர் பாலமுரளி, சீயோன் நகர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெள்ளாளன்விளை சேகரத் தலைவர் குருவானவர் ரவிக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளியின் முன்னாள் தாளாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசினார். தொடந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் பழைய மாணவர் சங்க செயலாளர் அதனாஷியஸ் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் குருவானவர் எட்வின், முன்னாள் தலைமை ஆசிரியர் கோ.ஜெபஸ்டின் செல்வக்குமார்,துணை தலைவர்கள் தேவாசீர்வாதம், ராஜேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வை.இராஜரத்தினம், சீயோன்நகர் ஊர் தலைவர் சற்குணம், மேஷாக், இம்மானுவேல் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக பள்ளித் தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










