» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா : நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை
புதன் 27, ஆகஸ்ட் 2025 3:47:34 PM (IST)

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவன் கோவில் தபசு மண்டபத்தில் விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவன் கோவில் தபசு மண்டபத்தில் உள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் இசக்கிலெட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்டனர்.
மாநகர பொதுச்செயலாளர் நாராயணன் ராஜ், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாரியப்பன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எல்ஆர் சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர், பலவேசம் மேற்கு மண்டல தலைவர் சுதாகர் உட்பட பலர் கலநது கொண்டனர். மேலும் மாநகர இந்து முன்னணி சார்பாக பல்வேறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










