» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செப்.7ல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் : வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு!
புதன் 27, ஆகஸ்ட் 2025 3:35:00 PM (IST)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிற தேர்தலுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். திருமண்டல தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜாண் சந்தோஷம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் முதல் கட்ட தேர்தல் செப்.7ஆம் தேதி திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை பிரதிநிதிகள் தேர்தல் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு பதவிகளுக்கான தேர்தல்கள் சேகர மற்றும் சபை மன்ற அளவில் நடைபெறுகிறது. இறுதியாக நவம்பர் 12, 13 தேதிகளில் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளாக உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக திருமண்டல தேர்தல் அலுவலகம் நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி விருந்தினர் மாளிகையில் ஜுலை 21 முதல் புதிதாக செயல்பட்டு வருகிறது. இத்தேர்தல்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி ஒப்புதலின் அடிப்படையில், தேர்தல் அதிகாரிகளான ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஜாண் சந்தோஷம், வக்கீல் பிரபாகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருமண்டல தேர்தலில் வேட்புமனுக் களை உறுதி செய்வதற்கு திடப்படுத்தல் சான்றிதழ் மட்டுமே போதுமானது. சிலருக்கு திடப்படுத்தல் சான்றிதழ் பெறுவதில் காலதாமதமாவதை கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் அலுவலகத்தில் செலுத்திய பேராயர் அலுவலக கட்டண ரசீது போதுமானது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. திடப்படுத்தல் சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் ஞானஸ்நான சான்றிதழ், திருமண சான்றிதழ் ஒன்றினை சமர்ப்பித்து வேட்புமனுக்களை உறுதிப்படுத் திக்கொள்ளலாம்.
சேகர இறுதி வாக்கா ளர்பட்டியல், திருமண்டல பெருமன்ற வேட்பாளர் பட்டியலை சேகரத்தலை கையெழுத்தோடு நாசரேத்தில் அமைந்துள்ள திருமண்டல தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சபைமன்ற தலைவர் இந்த முறை திருமண்டல தேர்தலில் வாக்காளர்கள், வாக்களித்தவுடன் கை விரலில் மையிடும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் வாக்களிக்கவருபவர்கள் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு முத்திரை உள்ள புகைப்படத்துடன் கூடிய ஏதாவதொரு அடையாள அட்டையுடன் வாக்கு செலுத்த வேண்டும்.
இதனை சபையாருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதான ஆலய ஆராதனையில் தெரியப்ப டுத்த வேண்டும். சேசுரத்தலைவர்கள். கிளை சபை ஊழியர்கள் அனைவரும் தேர்தல் அலுவலர்களாக கருதப்படுவதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சபை ஊழியர்கள் தேர்த லில் போட்டியிட விரும் பினால், அன்னார் தனது சபை ஊழியர் கடந்த 25.08.2025க்குள் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் அனைத்து சேகரங்களிலும், வேட்பு மனுத்தாக்கல், வாக்கு சேகரிப்பு உட்பட தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










