» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வரத விநாயகருக்கு தங்க கவசம் அணிவிப்பு: திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:48:46 AM (IST)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரத விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதுபோல், தூத்துக்குடி கதிரேசன் கோவில் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு வரத விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பூர்ணா குதி மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், தேன், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் தங்க அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










