» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:26:05 AM (IST)
தூத்துக்குடியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முல்லை நகர், ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மாரிமுத்து (25). கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியை முடித்து வீட்டுக்கு வந்த அவர், தனது கை மற்றும் கால் பகுதிகளில் வண்டி சாவியை வைத்து வெட்டிக்கொண்டு ரத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளார். பின்னர் தனது அறையில் தூக்கு போட்டுக்கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாரிமுத்து உடலை தூத்துக்குடியை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மாரிமுத்து ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காதல் தோல்வி காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










