» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மாணர்களுக்கு பாராட்டு விழா
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:18:37 AM (IST)

நம் பதிப்பகம் மற்றும் நம் தமிழ் மீடியா சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெற்ற அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப் பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மாணவர்களைப் பாராட்டி உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஸ்வர் ரான் தலைமையில் புத்தகப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் வரவேற்றுப் பேசியநம் பதிப்பக நிறுவனரும் எழுத்தாளருமான இவள் பாரதி "வாசிப்பு வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள உதவும் ஒரு கருவி" என்றார்.
தலைமையுரை ஆற்றிய உதவி ஆட்சியர் (பயிற்சி) மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்தியம்பினார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் 21 பேருக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேருக்கும், ஆங்கிலத்தில் சிறப்பாக விளங்கிய 9 மாணவர்களுக்கும் 1500 ரூபாய, 1000 ரூபாய், 750 ரூபாய் என 50,000 ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சிதம்பரநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரோஸிட்டா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










