» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு கையாளுவதில் 40 சதவீதம் வளர்ச்சி

புதன் 27, ஆகஸ்ட் 2025 8:20:43 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு கையாளுவதில் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சமையல் எரிவாயு, மொத்த திரவ சரக்குகளும் அதிக அளவில் கையாளப்பட்டு வருகின்றன சமையல் எரிவாயு துறைமுக எண்ணெய் தளத்தில் கையாளப்படுகின்றன. இந்த தளம் 150 மீட்டர் நீளமும், 13 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. 

இதில் 150 முதல் 230 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தளத்தில் தற்போது 40 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்களை கையாள முடியும். இதனை 55 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்களை கையாளும் வகையில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) கையாளுவதில் வளர்ச்சி பெற்று உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 529 டன் சமையல் எரிவாயு கையாண்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட (93 ஆயிரத்து 364 டன்) அளவை விட 40.01 சதவீதம் அதிகம் ஆகும்.

இதே போன்று துறைமுகம் மொத்த திரவ சரக்குகள் கையாளுவதிலும் வளர்ச்சி பெற்று உள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் 15.24 லட்சம் டன்னாக இருந்த திரவ சரக்குகளின் அளவு படிப்படியாக அதிகரித்து 2024-25-ம் நிதியாண்டில் 18.79 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.

மேலும் சமையல் எரிவாயு மற்றும் மொத்த திரவ சரக்கு கையாளுவதில் ஏற்பட்டு உள்ள நிலையான வளர்ச்சி நாட்டின் எரிசக்தி மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்வதில் துறைமுகத்தின் வலுவான அர்ப்பணிப்பை காட்டுகிறது. மேலும் எண்ணெய் தளம் மேம்படுத்தும் பணி முடிவடையும் போது, இந்த தளத்தில் பெரிய வகை கப்பல்களை கையாள முடியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

அதுAug 27, 2025 - 01:41:42 PM | Posted IP 104.2*****

யாருக்கு வளர்ச்சி ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory