» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை: வாலிபர் கைது
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:09:49 AM (IST)
குலசேகரன்பட்டினம் அருகே தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக முதியவரை வாலிபர் சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே சிறுநாடார்குடியிருப்பு கீழ தெருவைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (65), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் அப்பகுதியில் நடந்த விழாவில், பந்தி வைப்பதில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துரைப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பின்னர் துரைப்பாண்டி ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவில் துரைப்பாண்டி அங்குள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, கீழத்தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த செந்தில்குமார் மகன் சிவலிங்கம் (24) திடீரென்று கத்தியால் துரைப்பாண்டியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கழுத்து, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த அவர் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் சிவலிங்கம் தப்பிச் சென்றார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயமடைந்த துரைப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரன்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேேய அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று இறந்த துரைப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ெசந்தில்குமார் கொலைக்கு பழிக்குப்பழியாக அவருடைய மகன் சிவலிங்கம் 15 மாதங்கள் காத்திருந்து துரைப்பாண்டியை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










