» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அண்ணா, பெரியார் பிறந்த நாள்விழா பேச்சு போட்டி : மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:50:52 PM (IST)
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி செப்.11ம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி செப்.12ம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன..
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் மற்றும் பதின்மப் பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி 11.09.2025 அன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 12.09.2025 அன்றும் பேச்சுப்போட்டிகள் காலை 09.00 மணிக்கு தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளன.
பேரறிஞர்அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி 11.09.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டித் தலைப்புகள் தமிழும் அண்ணாவும், தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனையன், மாணவர்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற தலைப்புகளிலும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டித் தலைப்புகள் அண்ணாவும் மேடைப்பேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, வாய்மையேவெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம், பேரறிஞர் அண்ணாவும், தமிழக மறுமலர்ச்சியும், என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
தந்தைபெரியார் அவர்களின் பிறந்தநாளை யொட்டி 12.09.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டித் தலைப்புகள் தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், வைக்கம்வீரர், பகுத்தறிவுபகலவன், பெரியாரின் சமூகச் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டித் தலைப்புகள் தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலக சிந்தனையாளர்களும், பெரியாரும், சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது மேற்காணும் தலைப்புகளில் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு வழங்கப்பெறும்.
தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெறும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5,000/-, இரண்டாம்பரிசு ரூ,3,000/- மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2,000/- மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2,000/- வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பெறும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ,3000/-, மூன்றாம் பரிசு ரூ.2,000/- மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி / கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பேச்சுப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










