» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 9:47:44 AM (IST)

பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. மழைவளம், விவசாயம், தொழில்வளம், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி பெண்கள் கஞ்சிக்கலயம், தீச்சட்டி, முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக வந்தனர். மகளிர் அணி ஒருங்கினைப்பாளர் சக்தி.பத்மாவதி தலைமையில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கினைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது.
அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை கழுகுமலை மன்ற தலைவர் அழகர் துவக்கி வைத்தார். இவ்விழாவில் இளையரசநேந்தல் மன்ற தலைவி கிருஷ்ணம்மாள், வண்டானம் மன்ற பொறுப்பாளர் அன்னத்தாய், எட்டயபுரம் புதிய மன்ற தலைவர் கன்னா, வானரமுட்டி நாறும்பூ நாதன், முருகன், மன்ற பொறுப்பாளர்கள் ராஜேஷ்வரி, மாரிமுத்து, முருகேசன், சுப்புலெட்சுமி, வசந்தா, தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










