» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பாக கைப்பந்தாட்ட அரங்கம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 9:31:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முன்பாக உள்ள மைதானத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரின் முன்னெடுப்பின் படி காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் புதிய கைப்பந்தாட்ட (Vollyball) அரங்கத்தை உருவாக்கினர்.
மேற்படி உருவாக்கப்ட்ட கைப்பந்து விளையாட்டு அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் விளையாட்டு அரங்கத்தை உருவாக்க உதவிய காவல்துறை அதிகாரிகளை பாராட்டி விளையாட்டு அரங்கத்தை தொடர்ந்து சிறப்பாக பாராமரிக்குமாறு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










