» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரு மொழிக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது : தூத்துக்குடியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:56:02 PM (IST)



இரு மொழி கொள்கை என்று வரும் போது மாநில கல்விக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

தூத்துக்குடியில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக்கூட்டம் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து சுமார் 400 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் "SLAS 28 வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் இருக்கிறோம். பள்ளி வளாகம் முழுவதும் தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இந்தியாவில் யாரும் சிந்திக்காத திட்டத்தை நாம் செயல் படுத்தி வருகிறோம். நமது மாநிலத்தில் தான் ஆசிரியர்கள் அறம் சார்ந்து கல்வி கற்று கொடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கல்வியில் மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. கல்வியும் மருத்துவமும் இருகண்கள் என்று முதல்வர் செல்வதேடு மட்டுமல்லாமல் செயல் படுத்தி வருகின்றனர் என்றார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு கொள்கை சார்ந்து எங்களை கையெழுத்து போடுங்கள், விட்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது எங்களால் கண்டிப்பாக விட்டுக் கொடுக்க முடியாது. இரு மொழிக் கொள்கை என்று வரும் போது மாநில கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. இது மாநில உரிமையில் முக்கியமான உரிமை. இதை ஓர் காரணமாக வைத்துக் கொண்டு இதில் அரசியல் செய்வதாக கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 152 கோடி நிதி கடந்த ஆண்டும் கொடுக்கவில்லை.

இந்த ஆண்டும் ஆர்டிஏ நிதி ஆயிரத்து 800 கோடி தரவில்லை. இருந்த போதும் அதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆர்டிஏ 25 சதவீதத்திற்கு உண்டான பணத்தை நீங்கள் வழங்கிட வேண்டும் இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்படைவார்கள். இதனை உணர்ந்து உடனடியாக பணத்தை நீங்கள் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 

ஏற்கனவே 2 ஆயிரத்து 152 கோடி தரவில்லை என்று சொன்னால் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மாத சம்பளமாக இருந்தாலும் சரி, 43 லட்சம் மாணவர்கள் சார்ந்துள்ள பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் அதற்கான நிதியை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்று கருதி, நமது அரசு நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறது.

எப்படியானாலும் நாம் மத்திய அரசிடம் கேட்பது நமது பணம். நமது வரிப்பணம். அதை தாமதப்படுத்தக் கூடாது என்று கேட்கிறோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக 500 இடங்களில் வெற்றி பள்ளிகள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory