» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி முன்பு பஸ்களை நிறுத்த நடவடிக்கை: ஆட்சியரிடம் மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 3:42:48 PM (IST)

மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன் சமுதாயக் கல்லூரி முன்பு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விளாத்திகுளம் மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன் சமுதாய கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : எங்களது கல்லூரி கடந்த 15 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் 185 மாணவிகள் படித்து வருகின்றார்கள். 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரி முன்புள்ள பேருந்து நிறுத்ததத்தில் பஸ்கள் நிற்காமல் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மேல்மாந்தையில் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எங்களது கல்லூரிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கல்லூரியில் இருந்து கல்லூரி பேருந்து நிறுத்தம் தொடர்பாக இரண்டு முறை மனு கொடுத்தும் மனு சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தூத்துக்குடி - ராமநாதபுரம் மற்றும் ராமநாதபுரம் - தூத்துக்குடி செல்லும் பேருந்துகளை எங்கள் கல்லூரி முன்பு நிறுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










