» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் பரிதாப சாவு
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:28:37 PM (IST)
தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மீனாட்சிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மனைவி முத்தரசி (48). இவரது மகள் ஐஸ்வர்யா (30), பேத்தி காயத்ரி (5) ஆகிய மூன்று பேரும் கடந்த 1ம் தேதி ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர்.
திருச்செந்தூர் ரோடுமுத்தையாபுரம் அருகே வரும்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் முத்தரசி, அவரது மகள் ஐஸ்வர்யா பேத்தி காயத்ரி ஆகிய மூன்று பேரும் காயம் அடைந்தனர். மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முத்தரசி இன்று காலை இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










