» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 6, மே 2025 5:42:10 PM (IST)

திருச்செந்தூர் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தட்டு பிரசாத ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கிராம தேவதை ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு பால்குடம் திருவீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடம் அணிந்து வந்தனர். காலை 9.30.மணிக்கு அபிஷேகம், காலை 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 11 மணிக்கு திருக்கோவிலில் இருந்து தட்டு பிரசாதம் புறப்பாடு மதியம் 1 மணிக்கு அம்பாள் தாடகத்தி வேடத்தில் நகர்வலம் வருதல் நடந்தது. விழாவையொட்டி சபாபதிபுரம் தெரு திருநாவுக்கரசர் திருமண மண்டபத்தில் காலை டிபன், மதியம் 1மணி முதல் 3 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நள்ளிரவு இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும், நள்ளிரவு 1 மணிக்கு முத்தாரம்பாள் தங்க சப்பரத்தில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்பாள் சப்பரம் திருக்கோவில் சேர்க்கை 5 மணிக்கு படப்பு தீபாராதனை, படப்பு அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை சைவ வேளாளர் சங்கத்தினர், இளைஞர் பேரவையினர் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










