» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 12:39:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம், லிங்கம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
இதில் குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள்,வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித் தனியாக தரம் பிரித்து வழங்கப்படும் பணிகள், உரக்கிடங்கு அமைக்கும் பணியையும், லிங்கம்பட்டியில், அங்கன்வாடிமையம் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் மீனாட்சிபுரத்தில் மரக்கன்று உற்பத்தி மையத்தினையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா ஆய்வு செய்து நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக் குமார், ராமராஜன், உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம், ஒன்றிய பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










