» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி ரேஷன் கடைகளில் சோப்பு வாங்குமாறு வற்புறுத்தல்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

செவ்வாய் 6, மே 2025 10:40:42 AM (IST)



துாத்துக்குடியில் ரேஷன் கடைகளில் சோப்பு வாங்கச் சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

துாத்துக்குடி மாவட்டத்தில், தற்போது ரேஷன் கடைகளில் கோதுமை அறவே போடுவதில்லை. மேலும்,பாமாயில் சப்ளை என்பது, இன்னும் முழுமையாக வரவில்லை. இந்த மாதத்திற்குரிய பாமாயில், கடந்த ஏப். 25ம் தேதிக்கு மேல் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். ஆனால், கூடுதலாக 10 நாட்கள் ஆகியும் இன்னும், பல கடைகளுக்கு பாமாயில் அனுப்பி வைக்கப்படவில்லை. 

அனுப்பி வைத்த கடைகளுக்கும் முழுமையாக பாமாயில் அனுப்பாமல் 30 சதவீதம், 40 சதவீதம் வரை தான் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தற்போது ரேஷன் கடைகளில் பெரிய பிரச்னையாக இருப்பது, கூட்டு றவுத்துறை அதிகாரிகள் 4 வகை சோப்புகளை கொடுத்து, கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்று, பணியாளர்களை கட்டாயப் படுத்துகின்றனர். 

ஒரு சில மக்கள் வாங்குகின்றனர். பலர் வாங்க மறுக்கின்றனர். "எங்களுக்கு அதிகாரிகள் கட்டாயம் விற்க வேண்டும் என்று டார்ச்சர் செய்வதால், நாங்கள் வேறு வழியில்லாமல் பொதுமக்கள் சிலரிடம் எப்படியாவது வாங்குங்கள் என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது. சிலர், நாங்கள் காலம் காலமாக ஒரு சோப்பை பயன்படுத்தி வரும் போது, திடீரென இந்த சோப்பை போட்டால் அலர்ஜி வந்து விடும் என்று கூறி வாங்க மறுக்கின்றனர். 

டயனா சோப்பு ரூ.29க்கும், டி.சி.எம்.எஸ். சோப்பு 47க்கும், டயலோ சோப்பு 20க்கும், குமரி சோப்பு ரூ.33க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆனால் சோப்புகளை மக்கள் வேண்டாம் என்று கூறுகின்றனர். அதிகாரிகளின் டார்ச்சரால் பொதுமக்களிடம் பிரச்சனை ஏற்படுகிறது. இதுகுறித்து,  மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory