» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சித்திரைத் திருவிழாவில் சமணர்களை கழுவேற்றிய லீலை : திரளான பக்தர்கள் தரிசனம்

செவ்வாய் 6, மே 2025 10:10:24 AM (IST)



விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் சமணர்கள் கழுவேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழாவின் 6-ஆம் நாளான நேற்று இரவு பூங்கோயில் சப்பரங்களில் அம்மனும், சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினர். இதையடுத்து நள்ளிரவு 1.30 மணி அளவில் கீழரத வீதியில் 'சமணர்களை கழுவேற்றிய லீலை' நடைபெற்றது.

முன் காலத்தில் சமணர்களுக்கும்  நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கும் நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்று சைவ சமயத்தை தழுவ மறுத்த காரணத்திற்காக பாண்டிய மன்னனான கூன் பாண்டியன் 8000 சமணர்களை கழுவேற்றம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

பாண்டிய மன்னர் காலத்தில் மரண தண்டனை விதிக்கும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கழுவேற்றம் நிகழ்வினை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு "சமணர்களை கழுவேற்றும் லீலை" நடைபெறுவது வழக்கம். 

அதன்படி, சித்திரை திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று நள்ளிரவில் விளாத்திகுளம் கீழரதவீதியில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் தீப்பந்தம் வெளிச்சத்தில் திகிலூட்டும் விதமாக கழுவேற்றம் நடைபெற்றது.. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து

பேரணி ஸ்ரீதரன்Jun 6, 2025 - 10:21:16 PM | Posted IP 162.1*****

1300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அநீதியை விழாவாக கொண்டாடுவது எவ்வகையிலும் நியாயம் அற்றது.அதைக் கோயில் விழாவில் கொண்டாடுதல் அறப்பிழை

sivamமே 6, 2025 - 10:43:52 AM | Posted IP 172.7*****

thirunagna sambathar not thirunauvkarasar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory