» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஜய் ரசிகர்கள் உருவாக்கிய தமிழக வெற்றி கழகம் பிரச்சார வீடியோ வெளியீடு..!

திங்கள் 5, மே 2025 3:21:51 PM (IST)



தூத்துக்குடியில் விஜய் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார வீடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. 

தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய்க்காக அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சார வீடியோ தூத்துக்குடியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. வில்லன் நடிகர் உறியடி சங்கர்தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோவை  ஸ்டார் பாபு இயக்கியுள்ளார்.

இந்த வீடியோவில் ஒரு தரப்பினர் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை தூக்கி எறிந்து பின்னர் கொடியை தீ வைக்க முற்படுகின்றனர். அப்போது உடனடியாக ஒருவர் வந்து அதனை தடுத்து நமக்காகத்தானே அவர் கட்சி ஆரம்பித்து உள்ளார்.. ஆகவே அவருடன் சேர்ந்து நாம் பயணிப்போம் எனவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது உடனடியாக நடிகர் விஜய் தூத்துக்குடி விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பண உதவி வழங்கினார் என்றும் அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் உறியடி சங்கர்தாஸ் மற்றும் ஸ்டார் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அரசியலில் பயணிக்க முடியாத நண்பர்களால் இந்த பிரசார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. 

ஆகவே களத்தில் மக்களுக்காக பிரச்சாரம் செய்யக்கூடிய காணொளியை வெளியிட்டுள்ளோம். தலைமை கழகம் ஒப்புதல் இல்லாமல் தான் இந்த வீடியோவை நாங்கள் தயாரித்துள்ளோம். முழுக்க, முழுக்க இந்த வீடியோவை ரசிகராகவே நாங்கள் தயாரித்து உள்ளோம் என்றார். பிரச்சார வீடியோவில் நடித்த பாபு கணேசன், பாலா, சிவா, அழகர், தங்கராஜ், வசந்த் உள்ளிட்ட விஜய் ரசிகர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory