» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்வளத் துறை ரோந்துப் பணி
திங்கள் 5, மே 2025 9:06:35 AM (IST)

தூத்துக்குடி கடல் பகுதியில் கேரளா, கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்கும் வகையில் மீன்வளத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஏப். 15ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை மீன்வளத் துறையால் மீன்பிடித் தடைக்காலம் அமல் படுத்தப்பட்டுள்ளது. தடைக்காலத்தின்போது, கேரள மாநிலத்திலிருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தும் மீன்பிடி விசைப் படகுகள் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதிகளில் தொழில் புரிவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கேரள மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரைப் பகுதி மீனவர்களும் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்- மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனன் தலைமையில் 2 விசைப்படகுகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை ரோந்துப் பணி நடைபெற்றது. இதில், மீன்வளத் துறை அலுவலர்கள், கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோரப் பாதுகாப்புக் குழு அலுவலர்கள், 7 மீனவப் பிரதிநிதிகள் ஈடுபட்டதாக மீன்வளத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










