» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மே-20 அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆயத்த மாநாடு!
ஞாயிறு 4, மே 2025 9:07:33 PM (IST)

மே-20 அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.
மத்திய அரசின் தொழிலாளர் விவசாய விரோத நடவடிக்கைகளையும், கார்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகளையும், தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரியும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26000 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதமியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 அன்று நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
வேலைநிறுத்தத்தில் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்றும் மறியல் போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளன. பொது வேலைநிறுத்ததை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வதற்கான மாவட்ட அளவிலான அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிட்டி டவர் ஹாலில் நடைபெற்றது.
மாநட்டிற்கு ஐஎன்டியுசி மாநில இணைச்செயலாளர் பி.ராஜ், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் அம்சத், தொழிலாளர் முன்னேற்றப் பேரவை மாவட்டத் துணைத்தலைவர் கருப்பசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் தொழிலாளர் முன்னேற்றப் பேரவை மாவட்டச் செயலாளர் சுசீ ரவீந்திரன், ஹெச்எம் எஸ் ஓட்ட்பபிடாரம் பொறுப்பாளர் ராஜேஸ், ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் லோகநாதன் ஆகியோர் வேலைநிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வது குறித்து உரையாற்றினர். இறுதியாக சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல் நிறைவுரையாற்றினார். நிறைவாக ஹெச்எம்எஸ் கோவில்பட்டி பொறுப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
தூத்துக்குடி துறைமுகம், அனல்மின் நிலையம், பாரதி கூட்டுறவு நூற்பாலை, தாரங்கதாரா கெமிகல் தொழிற்சாலை உள்ளிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறைவனங்கள், உப்பளங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வது என்றும் மின்வாரியம், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள், கண்டெயினர் வாகனங்கள் இதர சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள், உப்பளங்கள், தீப்பெட்டி தொழிலகங்களில் முழுமையாக வேலைநிறுத்தம் செய்வது என்றும், வேலைநிறுத்தத்துக்கு லாரி உரிமையாளர்கள், உப்பளம், தீப்பெட்டி ஆலை நிர்வாகத்தினர், துறைமுக சரக்கு ஏற்றி இறக்கும் முகவர்களிடம் ஆதரவு கோருவது என்றும், மத்திய அரசின் வரிக்கொள்கையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள் கடையடைப்பு செய்து ஆதரவளிக்க வணிக சங்க தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரகின் தொழிலாளர் விரோத கொள்கைகளை தொழிலாளர்களிடமும், மக்களிடமும் எடுத்துச் செல்லும் வகையில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் வாயிற் கூட்டங்கள நடத்துவது என்றும், மக்களிடம் விரிவான பிரச்சாரத்தை கொண்டு செல்லும் வகையில் துண்டுபிரசுர விநியோகம், போஸ்டர் இயக்கம், தெருமுனைக் கூட்டங்கள், நடைபயணம் போன்ற வடிவங்களில் 15 நாட்கள் பிரச்சாரம் செய்வது என்றும் இப்பணியில் அனைத்து தொழிற்சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள், வட்டார அளவிலான நிர்வாகிகள், ஊழியர்கள் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 17 நாட்களாக நடைபெற்று வரும் என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும், மத்திய மாநில அரசுகளையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










