» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 4 மையங்களில் நீட் தேர்வு: 60 வயதில் தேர்வெழுதிய சித்த மருத்துவர்!

ஞாயிறு 4, மே 2025 4:15:01 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடியில் 60 வயது சித்த மருத்துவர் நீட் தேர்வினை எழுதினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடந்தது. இதில், எட்டயபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் ஆங்கிலத்தில் தோ்வு எழுதுவோருக்கும், தூத்குக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தோ்வு எழுதுவோருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. 

மாவட்டத்தில் மொத்தம் 1,800 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் 461, தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 458, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 348, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 466 என மொத்தம் 1733 போ் தோ்வு எழுதினா். இதில் 67 போ் தோ்வு எழுத வரவில்லை.


ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர்  பச்சைமால் 60 வயதில் தன்னம்பிக்கையுடன் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்தார். மாணவ மாணவிகள் நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைய வேண்டாம், விபரீத முடிவு  எடுக்கக் கூடாது காலம் இருக்கிறது என்று தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியபடி தேர்வு எழுத சென்றார்  மத்திய அரசு நீட் தேர்வு எழுத வயது வரைமுறை கொண்டுவர வேண்டும், தமிழக அரசு சிபிஎஸ்சி கல்விக்கு இணையாக பாடத்திட்டத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory