» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பனை: 2பேர் கைது

வியாழன் 6, பிப்ரவரி 2025 5:25:07 PM (IST)

அயன் பொம்மையாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் மற்றும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த 2பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், அயன் பொம்மையாபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது,  சட்ட விரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை வைத்திருந்த, அதே பகுதியைச் சேர்ந்த பூலோக பாண்டியன் மகன் பாலமுருகன் (39) மற்றும் பாலசுப்பிரமணியன் மகன் விஜயகுமார் (36) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 528 மதுபாட்டில்கள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து

NAAN THAANFeb 7, 2025 - 12:13:27 PM | Posted IP 162.1*****

528 மதுபாட்டில்கள் / 50 கிராம் கஞ்சா STOCK LOGIC ILLAMA IRUKU...

இந்த ஊருக்காரந்தான்Feb 6, 2025 - 09:29:34 PM | Posted IP 162.1*****

பல குடும்பங்களை சீராளித்தவர்கள் காவலர்களுக்கும் இதில் பங்கு உண்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory