» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வானியல் திருவிழா: டெலஸ்கோப்பில் கோள்களை கண்டு ரசித்த பொதுமக்கள்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 4:05:19 PM (IST)

கடம்பூரில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நடந்த வானியல் திருவிழாவில் வானில் உள்ள கோள்கள் மற்றும் நிலாவினை டெலஸ்கோப்பில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கடந்த 3ம் தேதி முதல் நாட்டு நலப்பணி திட்ட சேவை முகாம் நடந்து வருகிறது.இதில் தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் இரண்டு டெலஸ்கோப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வானில் உள்ள வெள்ளி, நிலா உள்ளிட்ட கோள்களை டெலஸ்கோப்பில் கண்டு மகிழ்ந்தனர்.
இதில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துசாமி,ரமேஷ், மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு டெலஸ்கோப்பில் வானில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் நிலா ஆகியவற்றை காணுவதற்கு பயிற்சி அளித்து வானியல் குறித்து பேசினர்.
இதில் எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் கண்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், தங்கமணி, கல்லூரி முதல்வர் செல்வராஜ்,பேராசிரியர்கள் விஜய கோபாலன், கனகவல்லி,ராஜ பிரியங்கா, உட்பட மாணவர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










