» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை: கடன் பிரச்சனையால் சோகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 12:28:07 PM (IST)
ஆத்தூரில் மகனின் கடன் பிரச்சனையால் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூர், வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி மகன் ராஜகோபால் (72). இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் பிரகாஷ் அதிகளவில் கடன் வாங்கியிருந்தாராம். கடன் கொடுத்தவர்கள் பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு ராஜகோபாலிடம் வற்புறுத்தினார்களாம்.
இதனால் மனவேதனையடைந்த ராஜகோபால் நேற்று தனது கடையில் வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










