» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனிப்பிரிவு காவலர்கள் 49பேர் பணியிட மாற்றம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., உத்தரவு!
வியாழன் 6, பிப்ரவரி 2025 11:05:38 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு காவலர்கள் 49 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனிப்பிரிவு காவலர்களாக கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காவலர்கள் 49 பேர் அதிரடியாக இடம் மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆனந்த கிருஷ்ணகுமார் சிப்காட் காவல் நிலையத்திற்கும் சிப்காட் காவல் நிலைய கலைவாணன் தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கும், மத்திய பாகம்காவல் நிலையம் சாமுவேல், சிப்காட் காவல் நிலைய பொன்பாண்டி தட்டப்பாறை காவல் நிலையத்திற்கும், தென்பாகம் காவல் நிலையம் ராஜா உள்பட மாவட்ட முழுவதும் 49 தனிப்பிரிவு காவலர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
இதில் தனிப்பிரிவுகாவலராக பணிபுரிந்த 13 பேர் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தில் பணிபுரிந்த வந்த 8பேர் தனிப்பிரிவு காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பிரிவு காவலர்கள் இடம் மாற்றம் செய்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










