» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் : 4பேர் கைது!
வியாழன் 6, பிப்ரவரி 2025 10:48:44 AM (IST)

தூத்துக்குடியில் காரில் கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில், நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், தனிப்படை தலைமை காவலர்கள் முத்துச்சாமி ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு சத்யா நகர் மேம்பாலம் அருகே வாகன சோனதையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை கொண்டு வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக காரில் வந்த தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த கோபிநாத் மகன் காந்தி (21), தேவர் காலனியைச் சேர்ந்த சின்னபாண்டியன் மகன் மகேஷ் செல்வம் (35), வீரபுத்திரன் மகன் வசமுத்து (23), கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாம மகன் கோவிந்தராஜன் (29)ஆகிய 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், 4 செல்போன், மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










