» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி வெளிநாட்டு சிகரெட், பீடி இலைகள் பறிமுதல்: 2பேர் கைது!
வியாழன் 6, பிப்ரவரி 2025 8:39:16 AM (IST)

தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள கட்டிங் பீடி இலை, வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குளத்தூர் கல்லூரணி கிராம கடற்கரையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ் குமார் இசக்கி முத்து முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடு்படிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட 30 மூடை கட்டிங் பீடி இலைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் எண்ணம் மான்செஸ்டர் சிகரெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றபட்ட சிகரெட் மற்றும் கட்டிங் பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடி ஆகும்.
இது தொட்பாக லோடு வாகனத்தில் வந்த ஓட்டப்பிடாரம் மேல சுப்பிரமணியபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த ஆணையப்பன் மகன் சித்திரை வேல் (25), ஓசநூத்து சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சிவபெருமாள் (28) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பொட்டல்காட்டைச் சேர்ந்த வினித் என்பவரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










