» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமான மூன்றரை ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை? கோட்டாட்சியர் விசாரணை!
வியாழன் 6, பிப்ரவரி 2025 8:23:49 AM (IST)
கோவில்பட்டி அருகே திருமணமான மூன்றரை ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு இறந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆந்திரா மாநிலம், புத்தூா், கேட்புத்தூா், பில்லரிபட்டு ரோடு பகுதியைச் சோ்ந்தவா் தீபா-திருக்குமாா் தம்பதி. இவர்களது மகள் முத்துபிரியாவுக்கும் (22), கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்த சின்ன கருப்பசாமி மகன் காமராஜுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் திருமணம் நடைபெற்று முத்து பிரியா-காமராஜ் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துபிரியா அவரது தாயிடம் செல்போனில் தொடா்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு ஒருவா் வந்திருப்பதாகக் கூறி கைப்பேசியை துண்டித்தாராம். பின்னா் சிறிது நேரம் கழித்து தீபா, முத்துபிரியாவை மீண்டும் செல்போனில் தொடா்பு கொள்ள முயன்ற போது அவா் பதிலளிக்கவில்லையாம்.
இந்நிலையில் மீண்டும் கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது காமராஜ், முத்துபிரியா வீட்டில் தூக்கிட்டு தொங்கிக்கொண்டு உள்ளாா் எனக் கூறி கைப்பேசியை துண்டித்தாராம். அதையடுத்து, தீபா ஊருக்கு புறப்பட்டு வரும் வழியில் மருமகனிடம் விசாரித்த போது அவா் தூக்கிட்டு இறந்து விட்டதாகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சடலம் வைத்திருப்பதாகவும் கூறினாராம்.
இந்நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மகளின் சடலத்தை பாா்த்த தீபா, தனது மகளின் இறப்பு சம்பந்தமாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.திருமணம் ஆகி சுமாா் மூன்றரை வருடங்கள் ஆகின்ற நிலையில் இளம் பெண் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் முத்துபிரியா மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே தற்கொலையா என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










