» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: த.வெ.க ஆதரவு!

வியாழன் 6, பிப்ரவரி 2025 8:15:57 AM (IST)



நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு த.வெ.க ஆதரவு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக த.வெ.க மாநில கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் தலைமையில் கட்சியினர் நேரடியாக கல்லூரிக்கு சென்று கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும், இதில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் பேசிய போது,  "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் கொண்டு சென்று, தமிழ்நாடு அரசு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதற்கு தமிழக வெற்றி கழகம் தங்களுடன் இணைந்து போராடும் என்று தெரிவித்தார். 

இப்போராட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலா, கட்சி நிர்வாகிகள் வீரபாண்டி மகேஷ், ஆரோக்கியராஜ், செந்தில்குமார், வினோத் கண்ணன், சித்ரா, கௌதமி, செண்பகக்கனி, பொன்காசிராம், அருள் ராஜா, கபாலீஸ்வரர், ராமகிருஷ்ணன், சந்திரன், சண்முகராஜ், முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு த.வெ.க-வின் ஆதரவு தெரிவித்தனர்.

கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்கலைக்கழகத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் இக்கல்லூரி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory