» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் : 25 பேர் கைது
வியாழன் 6, பிப்ரவரி 2025 7:59:30 AM (IST)
தூத்துக்குடியில் பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கும் வகையில் எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு மாவட்ட ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத பட்ஜெட்டை கண்டித்து சங்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் ஆகியோர் தலைமையில் பட்ஜெட் நகலை கிழித்து எறியும் போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை தென்பாகம் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










