» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட அமமுக செயலாளர்கள் நியமனம் : டிடிவி தினகரன் அறிவிப்பு

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:36:52 AM (IST)

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயாளர்களை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    
தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஓருங்கிணைந்த மாவட்டத்தை தூத்துக்குடி மாநகர், புறநகர் வடக்கு மற்றும் தெற்கு என 3 மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு அதற்குண்டான சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளாா். 

தூத்துக்குடி மாநகா் மாவட்டச் செயலராக இருந்த டி.வி.ஏ. பிரைட்டா் அண்மையில் கட்சியிலிருந்து விலகுவதாக, பொதுச்செயலா் டி.டி.வி. தினகரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தாா். இந்நிலையில், புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, மாநகா் மாவட்டச் செயலராக பா. ஜானியேல் சாலமோன் மணிராஜ், புறநகா் வடக்கு மாவட்டச் செயலராக பூலோகபாண்டியன், புறநகா் தெற்கு மாவட்டச் செயலராக பொன்ராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory