» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணி தொடக்கம்

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:18:10 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி நாழிக்கிணறு தீர்த்தம் தொட்டியில் நிரப்பப்பட்டு பக்தர்கள் புனித நீராடினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.

இதை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் நாழிக்கிணறில் இருந்து மின் மோட்டார் மூலம் சின்டெக்ஸ் டேங்கில் தீர்த்தம் நிரப்பப்பட்டு பக்தர்களுக்கு புனித நீராட மாற்று வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, கோவில் பணியாளர்கள் மூலம் புனித நீராட வரும் பக்தர்களுக்கு அவர்கள் மேல் நாழிக்கிணறு தீர்த்தம் ஊற்றப்படுகிறது. முன்னதாக கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடி சென்றனர்.

இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாழிக்கிணற்றை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் பணிகள் தொடங்க உள்ளது. 

எனவே நாழிக்கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தீர்த்தம் தொட்டியில் நிரப்பி, அதன் மூலம் பக்தர்களுக்கு தீர்த்தம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாழிக்கிணற்றினை நல்ல முறையில் திருப்பணி செய்யவும், பக்தர்களுக்கு நாழிக்கிணறு தீர்த்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டிற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory