» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவனை கத்தியால் தாக்கியதாக 2பேர் கைது
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 8:09:57 AM (IST)
கோவில்பட்டியில் முன் விரோத்தில் சிறுவனைக் கத்தியால் தாக்கியதாக மற்றொரு சிறுவன் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுகிராமம் 4ஆவது தெருவைச் சேர்ந்த கு. மாரிமுத்துவின் மகன்கள் சங்கரநாராயணன், பாண்டீஸ்வரன் (14). சங்கர நாராயணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வென்னிமலை மகன் வேலு என்ற முனியசாமிக்கும் கடந்த தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு, கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாம்.
இந்நிலையில், அங்குள்ள அம்மன் கோயில் அருகே பாண்டீஸ்வரன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வேலு உள்ளிட்ட மூவர் வந்து, பாண்டீஸ்வரனின் அண்ணனால்தான் பிரச்னை ஏற்பட்டது எனக் கூறியதுடன், அச்சிறுவனை வேலு கத்தியால் தாக்கினாராம். இதைப் பார்த்த அப்பகுதியினர் கண்டித்ததும் அந்த 3 பேரும் பாண்டீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம்.
இதில், காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவன், புதுகிராமம் ஓடைத் தெரு முருகேசன் மகன் முத்துப்பாண்டி (19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். வேலுவை போலீசார் தேடிவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










