» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி- வெள்ளாரம் அரசு பேருந்து சேவை நீடிப்பு : கிராம மக்கள் மகிழ்ச்சி!
வெள்ளி 20, டிசம்பர் 2024 11:33:43 AM (IST)

கோவில்பட்டியில் இருந்து ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிராமத்திற்கு அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிராமத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் வேலை, கல்வி, நீதிமன்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். எனவே வெள்ளாரம் கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாரம் கிராமத்தில் கோவில்பட்டி - எம்.வெங்கடாசலபுரம் வரை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளாரம் வரை செல்வதற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)










இசக்கிமுத்துபனையூர்Feb 2, 2026 - 04:25:48 PM | Posted IP 104.2*****