» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மார்க்கெட் சாலையில் தடுப்புகள் : போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை!

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 8:53:17 AM (IST)


தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் ஜெயராஜ் ரோடு சந்திப்பு பகுதியில் காமராஜர் காய்கறி மார்க்கெட் அமைந்து உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இந்த பகுதி நகரின் முக்கிய சந்திப்பு பகுதியாக இருப்பதால், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாக செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், சாலையோரம் வாகனங்களை நிறுத்தாத அளவுக்கு தடுப்புகள் அமைத்து, அதில் கயிறு கட்டப்பட்டு உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தடுப்புகளுக்கு உட்புறமாக விடுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். போக்குவரத்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பெரிதும் அடைந்து உள்ளனர்.


மக்கள் கருத்து

மார்க்கண்டேயன்Aug 27, 2024 - 03:43:20 PM | Posted IP 172.7*****

காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் மாநகராட்சி நிர்வாகமே.... இந்த போக்குவரத்து தொல்லையிலிருந்து விடுபடலாம். அந்த ஏரியாவும் டெவலெப் ஆகும்.

இயற்கை ஆர்வலர்Aug 27, 2024 - 11:26:11 AM | Posted IP 162.1*****

அட முட்டா மாநகராட்சியை முதல்ல மரமாவது நடவுங்கள், நிற்கவே வெயில் தொல்லை தாங்க முடியவில்லை.

தேவபிரபு ஆசிரியர்Aug 26, 2024 - 11:06:55 PM | Posted IP 162.1*****

எந்த மேலை நாடுகளிலும் இதுபோன்று சாலையின் குறுக்கே தடுப்பு வைப்பதில்லை. நம் இந்திய சாலையில்தான் இது போன்ற அறிவு இல்லாத செயல்கள் அரசு மூலம் அரங்கேற்றப்படுகிறது. 80 கிலோமீட்டர் வேகத்தில் போக வேண்டும், 30 கிலோமீட்டர் வேகத்தில் போக வேண்டும், இங்கு வேக தடை உள்ளது, கவனமாக செல்லவும் என்று Sign Board எல்லாம் சாலையில் வைத்திருக்கும் அரசாங்கம்.. ஏன் சாலையின் குறுக்கே இது போன்ற தடுப்பு வைப்பதற்கு எச்சரிக்கை பதாதைகள் ஒன்றும் வைப்பதில்லை. இருட்டில் நடக்கும் ஏகப்பட்ட விபத்துகளுக்கு இந்த சாலையின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு பதாகைகளும், அந்தப் பதாதைகளில் விளம்பரம் இருக்கும் முதலாளிகளும், இருளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டாத சாலை அல்லது போக்குவரத்து அதிகாரிகளும், தேவையில்லாமல் பதாகை வைக்க அனுமதித்த அரசாங்கமும் தான் காரணம்.

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINAug 26, 2024 - 07:22:46 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் வடிகால்களின் மேல் பல இடங்களில் செங்கல் மண் போன்றவைகள் அளவிற்கு அதிகமாக (வடிகால்களின் தாங்கும் சக்திக்கும் கூடுதலாக) வைக்கப்படுகின்றன. மேலும் விளம்பர பேனர்கள் வடிகால் / நடைமேடைகளையும் தாண்டி சாலைகளை ஆக்கிரமித்துள்ளது இப்பொழுது அதிகரித்து வருகிறது. இதனால் நடைமேடைகளில் நடப்பவர்கள் நடு ரோட்டில் நடக்கின்றனர். தேவையற்ற / பழுதான இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் ஆக்கரமிப்பு கூடியுள்ளது. இதனால் கொசு உற்பத்தியும் கூடியுள்ளது. இவற்றின் மீது கவனம் செலுத்தி ஆக்கரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து சீராகும்.

தமிழ்ச்செல்வன்Aug 26, 2024 - 10:30:21 AM | Posted IP 162.1*****

அதுவே குறுகிய பகுதி. அதில் எதற்கு மேலும் இடத்தை சுருக்கும் அளவில் தடுப்புக்கள். ஒரு போக்குவரத்து காவல் ரெக்கவரி லாரியை அதில் நிறுத்துங்கள். வண்டியை எவனாவது நிறுத்தியதும் அதில் தூக்கி போட்டு, போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள். வண்டி வேண்டும் என்றால் 1000 அபராதம் கட்டச்சொல்லுங்கள். போக்குவரத்து சீராகி விடும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory