» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவலர் குடியிருப்பில் 10 பவுன் நகைகள் திருட்டு: வாலிபர் கைது

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 8:27:24 AM (IST)

விளாத்திகுளத்தில் காவலர் குடியிருப்பில் 10 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில்  வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள வேம்பார் சாலையில் சட்டம் -ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. இவற்றின் பின்புறமுள்ள காவலர்கள் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

விளாத்திகுளம் காவலர் செந்தில்முருகன் 4ஆவது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 16ஆம் தேதி சொந்த ஊரான மேலக்கல்லூரணியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சென்றார். அடுத்த நாள் காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில் அவர் வந்துபார்த்தபோது, மர்ம நபர்கள் கதவின் பூட்டு, பீரோவின் லாக்கர் ஆகியவற்றை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

3ஆவது மாடியில் வசிக்கும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் கிருபாவின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு எதுவும் திருடுபோகவில்லை. புகாரின்பேரில் விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் ஜி. முருகன் வழக்குப் பதிந்தார். தனிப்படை போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில், பதிவாகியிருந்த சந்தேக நபர் சம்பவ நாளின்போது விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, கூகுள் பே மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது. அந்தக் கைப்பேசி எண்ணைக் கண்காணித்ததில், அந்த நபர் ராமநாதபுரம் அருகே ரெட்டையூரணியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் உமாபதி (32) எனத் தெரியவந்தது.

அவர் சாயல்குடியில் உள்ள முடி திருத்தகத்தில் வேலை செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸார் சென்று அவரைக் கைது செய்து, விளாத்திகுளத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர் ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு, தேவிபட்டணம், திருப்பூர், பல்லடம், கோவை என பல்வேறு இடங்களில் உள்ள காவலர் குடியிருப்புகளைக் குறிவைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீஸார் கோவில்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory