» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பியர்ல்சிட்டி பிரஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி : மாதா நகர் அணி கோப்பையை வென்றது!
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 10:02:06 PM (IST)

தூத்துக்குடியில் பியர்ல் சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாதா நகர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தூத்துக்குடி பியர்ல் சிட்டி11 பத்திரிக்கையாளர் கிரிக்கெட் கிளப் சார்பில் முதலாவது கிரிக்கெட் போட்டி மீளவிட்டான் அருகே உள்ள என். பெரியசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 20 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கடந்த 17ஆம் தேதி துவங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் தூத்துக்குடி பியர்ல் சிட்டி11 பத்திரிக்கையாளர் கிரிக்கெட் அணியும் மாதா நகர் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய பியர்ல் சிட்டி11 கிரிக்கெட் கிளப் அணி எட்டு ஓவரில் 48 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து விளையாடிய மாதா நகர் கிரிக்கெட் அணி மூன்றுவர்களில் 49 ரன்கள் ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக லெஜன்ட் அட்வகேட் அணி பிடித்தது நான்காவது இடத்தை சிம்சன் 11 அணியும் பிடித்தன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் மகிழ், தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார், மக்கள் நீதி மையம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்
முதல் பரிசை ரூபாய் 15 ஆயிரத்தை ஜெர்ரி சுகன் குரூப் ஆஃப் கம்பெனி, இரண்டாவது பரிசை தூத்துக்குடி மாவட்ட வெற்றிக் கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னலும் மூன்றாவது பரிசை அரசு ஒப்பந்தக்காரர் வேலாயுதபுரம் பாண்டியும் நான்காவது பரிசை தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தலைவர் சிவக்குமார் ஐந்தாவது பரிசை தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை சங்க துணை தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சதீஷ்குமார், செல்வின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










