» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்!

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:46:39 PM (IST)



சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சாயர்புரம் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் இந்த ஆகஸ்டு மாதங்களில் ஆண்டுதோறும் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இப்பகுதியின் பிரதான திருவிழாவாகும். 

இந்நிலையில் சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம் பகுதியில் சில இடங்களில் வயர்கள் தாழ்வாரமாகவும் மற்றும் இரண்டு கம்பங்களுக்கு இடையே அரசு மின்வாரிய சட்டத்தை மீறி அதிகம் தூரம் முக்கியமான பகுதியில் இருந்தது.பல வருடங்களாக சேர்வைக்காரன்மடம் புதுமனை தெருவில் கோவில் சப்பரம் வரும்போது வயர்கள் தாழ்வாக செல்லும் போது அதன் மேலேயேயும் மற்றும் இப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது உரசும் நிலையில் இருந்தது. 

இதனை ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா நேற்று மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்-க்கும் மற்றும் ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா-க்கும் மின் வாரிய அதிகாரி ஜெயக்குமார் மற்றும் சாயர்புரம் செயற்பொறியாளர் அவர்களுக்கும் இந்த ஆபத்தான பழூதான மின் கம்பங்களை மாற்றவும் தாழ்வாரமான இடங்களில் செல்லும் வயர்கள் உள்ள பகுதியில் கூடுதல் மின்கம்பம் நட்டவேண்டும் எனவும் பலவருடங்களாக நிலவி வரும் இந்த பிரச்சனைக்கு போர்கால அடிப்படையில் இந்த திருவிழா காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்து அவர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று நிலமையை அவர்களிடம் எடுத்து கூறினார். 

சட்டமன்ற உறுப்பினர் இப்பணியை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தினார். மின் வாரிய அதிகாரிகளின் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் பேரில் உடனடியாக மனு அளித்து வலியுறுத்திய பகுதிகள் கூடுதல் மின் கம்பம் நிறுவப்பட்டும் மேலும் பழுதடைந்த கம்பம் மாற்றப்பட்டது. 

ஊராட்சி பொதுமக்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மின வாரிய உயர் அதிகாரி ஜெயக்குமார் சார் மற்றும் சாயர்புரம் செயற்பொறியாளர், மற்றும் மின பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டாவுக்கு நன்றி தெரிவித்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory