» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன் வியாபாிகள் 3பேருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பயங்கரம்!

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 8:56:15 PM (IST)

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாிகள் 3பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மேல சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி மகன் அரிகிருஷ்ணன் (55), கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் பிச்சையா மகன் சுடலைமணி (40), தாமோதரன் நகரை சேர்ந்தவர் உசேன் மகன் எட்மண்ட் (52) இவர்கள் 3பேரும் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை ஏலம் எடுத்து தெருத் தெருவாக கொண்டு சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

நேற்று இரவு மீன்பிடி துறைமுகத்தில் 3பேரும் மீன்களை ஏலம் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தூத்துக்குடி சுந்தரம்மாள் புரத்தைச் சேர்ந்த மரியதாஸ் மகன் வினோத் (50), மற்றும் 3பேர்கள் சேர்ந்து எங்கள் பகுதியில் நீங்கள் எப்படி மீன் வியாபாரம் செய்யலாம் என்று கேட்டு 3 பேருடன் தகராறு செய்தனர். 

இந்த தகராறில்ஆத்திரம் அடைந்த வினோத் மற்றும் 3பேரும் சேர்ந்து ஹரி கிருஷ்ணன், சுடலைமணி, எட்மெண்ட் ஆகிய 3பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள், இதில் 3பேரும் பலத்த காயம் அடைந்த மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மீன்பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory