» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்துக்கு மாணவர்கள் வருகை!

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 5:00:41 PM (IST)



ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்துக்கு இன்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் வருகை தந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகளை அவர்களோடு பேருந்தில் பயணித்து  நேற்று சனிக்கிழமை கூட்டி வந்து  ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை காட்டி மகிழ்ந்தார். இதோ போல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவர்களும் வந்து சைட் மியூசியத்தினை கண்டு களிக்க வேண்டும் என்று கூறினார்.
 
இதற்கிடையில் இன்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் தாலூகா காடல்குடி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பாக கல்வி சுற்றுலாவாக  நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள்  ஆதிச்சநலலூர் வருகை தந்தனர். ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு மையத்தில் உள்ள சைட் மியூசியத்தினை அவர்கள் ஆவலுடன் பார்த்தனர். அதன் பின் சி சைட்டில் உள்ள தொல்லியல் பொருள்கள் மற்றும் அங்குதோண்டப்பட்ட  குழிகள் பற்றி கேட்டறிந்தனர்.  

இவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நாடாளுமன்றசெல்வி,  ஆசிரியர்கள்   வனிதா முத்துக்குமாரி,  பட்டதாரி ஆசிரியர்கள் சங்கரமூர்த்தி , மாரிமுத்து  உடற்கல்வி ஆசிரியர்  அசோக்குமார் கணிதப் பட்டதாரி ஆசிரியை இளவரசி  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
ஞாயிற்று கிழமையில் கூட ஆர்வலாக வந்த மாணவர்களையும் அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்து கொடுத்த மத்திய தொல்லியல் துறை அலுவலர்களையும், தொல்லரியல் ஆர்வலர்கள் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory