» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரத்தில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம்
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 2:00:06 PM (IST)

விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை திருவிக நகர் சக்திபீட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.
மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயம், தீச்சட்டி எடுத்து ஆன்மிக ஊர்வலமாக வந்தனர். ஆன்மிக ஊர்வலத்தை வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வழியாக மன்றத்தை வந்தடைந்தது. அங்கு அன்னைக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் விஜயலெட்சுமி துவக்கி வைத்தார்.

விழாவில், திருவிக நகர் சக்திபீட மகளிர் அணி பத்மா, முத்துலெட்சுமி, துணைத்தலைவர் மாரியம்மாள், மன்ற பொறுப்பாளர்கள் ராஜதுரை, சுப்புலெட்சுமி, கற்பகம், சோலையம்மாள், சக்திவேலம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










