» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 11:47:38 AM (IST)
குலசேகரப்பட்டினம் அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரி மியான் மகன் சகாப் உசேன் (29), இவர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் வெல்டராக காண்டாக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1ம் தேதி விடுமுறையில் பீகாருக்கு சென்றவர் 20 ஆம் தேதி கல்லாமொழிக்கு வந்தாராம். வந்ததிலிருந்து சரியாக வேலை செய்யாமல் சோகமாக இருந்தாராம்.
மேலும் தனது நண்பர்களிடம் பீகாரில் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகும் அவள் திருமண செய்ய மறுத்து விட்டதால் எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று கூறினாராம். இந்நிலையில் நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










